பார்வை இழந்தவர் களுக்கு நான் கண்களைத் தருகிறேன். நீங்கள், ஏன் ஊன்றுகோல் தரவில்லை என்று கேட்கிறீர்கள். அறியாமை, ஆசை, கோபம், காமம் போன்றவை பார்வையை மறைத்திருக்கின்றன.
“விழிப்புணர்வு” என்கிற வெளிச்சத்தைப் பாய்ச்சி விட்டாலே போதும், ஊன்றுகோல்
எதற்கு?
சந்தோஷமாக வாழ
வயதான கிழவர் தன் நூறாவது பிறந்த நாளை மிகவும் சந்தோஷமாக கொண்டாடுகிறார்.
அவரை பார்த்து வியந்தவர்கள் "எப்படி சந்தோஷமாக வாழ்வதாக கேட்டபோது அவர், "
ஒவ்வொரு நாளும் நான் கண் விழிக்கிற போது சந்தோஷமாயிருப்பதா ? வேதனைப்படுவதா
? என்று கேட்டு விட்டு சந்தோஷத்தை தேர்வு செய்கிறேன்" என்றார்.
நிஜமான பிரச்சனை என்பது
எதுவும் இல்லை
ஒரு ஜென் குரு தன் சீடர்களிடம், " நான் பாட்டிலில் ஒரு வாத்தை போட்டேன்.
இப்போது அந்த வாத்து வளர்ந்து விட்டது. பாட்டிலின் கழுத்தோ மிகச் சிறியது.
எனவே வாத்து வெளியே வர முடியவில்லை. அது ஒரு சிக்கலாகி விட்டது. வெளியே
வராவிட்டால் வாத்து செத்துவிடும். பாட்டிலை உடைத்து வாத்தை வெளியேற்றலாம்.
ஆனால், பாட்டிலை உடைக்க நான் விரும்பவில்லை. அது விலைமதிப்புள்ள ஒன்று.
என்ன செய்வது என்று நீங்கள் சொல்லுங்கள்" என்றார்.
பாட்டில் தலையில் உள்ளது அதன் கழுத்தோ குறுகியது. தலையை உடைக்கலாம்.
ஆனால் அது விலைமதிப்புள்ளது. அல்லது வாத்தை சாகவிடலாம். ஆனால், அதையும்
அனுமதிக்க முடியாது. ஏனென்றால் நீங்கள் தான் அந்த வாத்து.
அந்த ஜென் குரு தொடர்ந்து சீடர்களைக் கேட்டார். அவர்களை அடித்தார். சீக்கிரம் வழி கண்டுபிடியுங்கள் என்றார். ஒரே ஒரு பதிலை தான் அவர் ஏற்றுக் கொண்டார். ஒரு சீடன் கூறினான், " வாத்து வெளியில் தான் இருக்கிறது !"
நீங்கள் வெளியே இருக்கிறீர்கள். எப்போதும் நீங்கள் உள்ளே இருந்ததில்லை. உள்ளிருப்பதாக எண்ணுவது தவறான கருத்து. எனவே, நிஜமான பிரச்சனை என்பது எதுவும் இல்லை - ஓஷோ
உனது நாளின் ஆரம்பமும் முடிவும் சிரிப்பாக இருக்கட்டும்
சில ஜென் மடாலயங்களில் ஒவ்வொரு துறவியும் காலை எழுந்தவுடன் சிரிக்க வேண்டும், மேலும் இரவு படுக்கப்போகும் முன்னும் சிரிக்க வேண்டும். நாளின் முதல் விஷயமும் கடைசி விஷயமும் சிரிப்பதாகத்தான் இருக்க வேண்டும். இதை நீ முயற்சி செய்து பார். இது மிகவும் அற்புதமானது. அது பார்ப்பதற்கு பைத்தியக்காரத்தனமாகத் தோன்றும், ஏனெனில் சுற்றிலும் கடுகடுப்பான மக்கள்தானே இருக்கிறார்கள். அவர்களால் புரிந்து கொள்ள முடியாது. நீ மகிழ்ச்சியோடு இருந்தால் இவர்கள் ஏன் நீ மகிழ்ச்சியாக இருக்கிறாய் என்று கேட்பார்கள். அந்த கேள்வியே மடத்தனமானது. மெது மெதுவாக சிரிப்பு அதிகமாவதை நீ காணலாம். முயற்சி செய்து பார். நீ சிரிக்க சிரிக்க அதிக அளவு மதத்தன்மையடைவதை நீ உணரலாம்.
மனதை
சந்தோஷமாகவே வைத்திருத்தல்
இது உனது வாழ்க்கையின் அடிப்படை விதிகளில் ஒன்றாகவே மாறட்டும். நீ ஏதாவது எதிர்மறையானதை கடந்து வர நேர்ந்தால் கூட அதில் எதையாவது நேர்மறையானதை காண முயற்சி செய். ஏதாவது ஒன்றை கண்டு பிடிக்க முடியும். எதிர்மறையிலும் நேர்மறையானதை கண்டுபிடிக்க கூடிய தகுதி நீ பெற்று விட்டால் நீ சந்தோஷத்தில் நடனமாடுவாய்.
முயன்று பார், வாழ்வின் புது கண்ணோட்டதை முயற்சி செய். நேர்மறையாளனாக இரு, எதிர்மறையாளனாக இராதே. எதிர்மறையாளன் தன்னைச் சுற்றிலும் நரகத்தை உருவாக்கிக் கொண்டு தானும் அதில் இருப்பான். நீ எந்த உலகத்தை உருவாக்குகிறாயோ அதில்தான் நீ இருப்பாய்.
இது உனது வாழ்க்கையின் அடிப்படை விதிகளில் ஒன்றாகவே மாறட்டும். நீ ஏதாவது எதிர்மறையானதை கடந்து வர நேர்ந்தால் கூட அதில் எதையாவது நேர்மறையானதை காண முயற்சி செய். ஏதாவது ஒன்றை கண்டு பிடிக்க முடியும். எதிர்மறையிலும் நேர்மறையானதை கண்டுபிடிக்க கூடிய தகுதி நீ பெற்று விட்டால் நீ சந்தோஷத்தில் நடனமாடுவாய்.
முயன்று பார், வாழ்வின் புது கண்ணோட்டதை முயற்சி செய். நேர்மறையாளனாக இரு, எதிர்மறையாளனாக இராதே. எதிர்மறையாளன் தன்னைச் சுற்றிலும் நரகத்தை உருவாக்கிக் கொண்டு தானும் அதில் இருப்பான். நீ எந்த உலகத்தை உருவாக்குகிறாயோ அதில்தான் நீ இருப்பாய்.
பார்வையாகவே மாறி விடு
ஒரு காரிலோ அல்லது ரயிலிலோ பயணம் செய்கிறாய் – நீ அப்போது என்ன செய்யப் போகிறாய் கவனத்தை வளர்த்துக் கொள்ள முயற்சி செய். காலத்தை வீண் செய்யாதே. அரைமணி நேரம் ரயிலில் அமர்ந்திருக்கப் போகிறாய் – கவனத்தை கூர்மைப்படுத்த முயற்சி செய். வெறுமனே அங்கிரு, எதையும் சிந்தனை செய்யாதே. யாரையாவது பார், ரயிலைப் பார், வெளியே பார். ஆனால் வெறுமனே அங்கிரு, எதையும் சிந்திக்காதே. சிந்தனையை நிறுத்தி விடு. அங்கிரு, பார். உனது பார்வை நேரடியாகவும், ஊடுருவுதாகவும் அமையட்டும். நீ எங்கே பார்த்தாலும் அந்த பார்வை திரும்ப பிரதிபலித்து வரும்போது நீ பார்ப்பவனைப்பற்றிய விழிப்புணர்வு அடைவாய்.
ஒரு வினாடியைக் கூட வீணாக்காதே
காலத்தை வீணடிக்காதே. நீ எதையாவது விரும்பவில்லையென்றால் அது என்னவாக இருந்தாலும் அதில் இருப்பது ஒரு கணமேயானாலும் அது தற்கொலையே. அதனால் என்ன இழப்பு ஏற்பட்டாலும் அதிலிருந்து வெளியே வந்துவிடு. அது உனது சக்தியை விடுவிக்கும், நீ வேறெங்காவது இணைப்பு ஏற்படுத்திக் கொள்ளலாம். ஒரு கதவை நீ மூடினால் வேறொரு கதவு திறக்கும். நீ இந்த கதவை மூடவில்லையென்றால் வேறு எந்த கதவும் திறக்காது – ஏனெனில் வேறொரு கதவை திறப்பது இந்த சக்திதான்.
நீ ஒரே பெண்ணை தொடர்ந்து பிடித்து வைத்துக் கொண்டிருப்பதில் நீ அவளை விரும்பாமல், அவளுடன் இருப்பதில் நன்றாக உணராமல் இருந்தால் அது ஒரு தொடர் பிரச்னையாகத்தான் இருக்கும். அது உனக்கு மட்டும் கெடுதலல்ல, அவளுக்கும் கெடுதல்தான். நீ உன்னிடம் பரிவு காட்டவில்லையென்றால் பரவாயில்லை, அவளிடமாவது பரிவு காட்டு. அவளிடமாவது மனித்தன்மையுடன் நடந்து கொள். நீ அவளை குறுக்குவது மட்டுமல்ல, உன்னையும்தான் குறுக்கிக் கொள்கிறாய். துன்பம் தரும் உறவு எதுவாக இருந்தாலும் அது இருவரையும்தான் பாதிக்கும்.
இந்த உறவு மட்டுமல்ல, நீ இந்த உறவில் தொடர்ந்து இருந்தால் அது வருங்காலத்து உறவையும் பாதிக்கும். இது உனது கடந்தகாலத்தின் பாகமாக மாறி விடுவதால் அது பாதிக்கிறது. அது உன்னைச் சுற்றிக் கொண்டிருக்கும். நீ இதுபோன்ற பெண்ணையே கண்டுபிடித்து, இதுபோன்ற சிக்கலில் மறுபடி மறுபடி மாட்டிக் கொள்ளும் வாய்ப்பு அதிகமாகிறது. இது உனது பழக்கமாகிவிடுகிறது.
நீ எந்த தொடர்பாவது நன்றாக இல்லை என்பதை உணர்ந்தால் நான் சொல்வது நீ அதிலிருந்து வெளியே வந்துவிடு, அதிலிருந்து வெளியே குதித்துவிடு. ஒரு வினாடி கூட வீணாக்காதே.
ஒன்றை உறுதியாக நம்புவோம் எனில் நன்மை நடக்கும்
ஒரு போலிச்சாமியார் இருந்தார். அவரிடம், உண்மையான தேடலுள்ள சீடன் ஒருவன்
வந்தான். “சுவாமி எனக்கு மந்திர உபதேசம் செய்யுங்கள்” என்று கேட்டான்.
“என் பெயர்தான் மந்திரம் அதனை உளமார உச்சரித்தாலே நன்மைகள் நடைபெறும்”
என்றார் சாமியார்.
கொஞ்சநாள் கழித்து நதிக்கரை பக்கமாகப் போனார் சாமியார். அங்கே ஒரே
கூட்டம், ஒருவர் வந்து “சுவாமி உங்கள் சீடன் தண்ணீர் மீது நடக்கிறான்”,
என்றார். ஓடிப்போய் பார்த்தார் சாமியார்.
சமீபத்தில் வந்த அதே சீடன் தான்! இவருக்கு ஆச்சரியம் தாங்க வில்லை. அவன்
கரைக்கு வந்ததும் தனியாக அழைத்துப் போய், “அதன் ரகசியம் என்ன? எனக்குக்
கற்றுத்தரக் கூடாதா?” என்றார் சாமியார்.
சீடன் சொன்னான், “உங்கள் பெயரை உச்சரித்துக் கொண்டே நடந்தேன் சுவாமி!
வேறேதும் ரகசியமில்லை” என்றான். அதற்குள் கூடியிருந்தவர்கள், “சீடனுக்கே
இவ்வளவு சக்தி என்றால், உங்களுக்கு எவ்வளவு சக்தியிருக்கும்! நீங்களும்
நதியில் நடந்து செல்லுங்கள் சுவாமி” என்று வற்புறுத்தி இழுத்துச்
சென்றார்கள். தண்ணீரில் நடக்க முயன்று “தொப்” என்று விழுந்தார் சாமியார்.
சீடனை அழைத்துச் சொன்னார், “ஐயா! நான் ஒரு போலி! இத்தனை காலம் ஊரை
ஏமாற்றியிருந்தேன். நீ தண்ணீரில் நடக்கக் காரணம் நானல்ல! உன் நம்பிக்கை”
என்றார்.
“ஒவ்வொரு மனிதனும் தன்னை முழுமையாக நம்பினால் புத்தனாய் மலர முடியும்.
மற்றவர்களை நம்புவது என்பது பழக்கத்தின் காரணமாகத்தான். உனக்கு உதவி
நீதான்” - ஓஷோ
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.