பொன் மொழிகள்

பூட்டுக்கள் தயாரிக்கப்படும்போதே சாவிகளும் தயாரிக்கப்படுகின்றன. ஒவ்வொரு பிரச்சனை உருவாகும்போதே தீர்வும் உருவாகிவிடுகிறது.

இறைவனது அருள் நம்மை எல்லாவற்றிலிருந்தும் பாதுகாக்கும்.

இறைமையில் மூழ்குகிறவன் என்றுமாக காப்பாற்றபடுகிறான்.


இறைவா மனதில் அமைதியும் உள்ளத்தில் நல்லெண்ணமும் இருக்க வேண்டும் எப்பொழுதும்.

இறையருள் எனக்கு நிச்சயம் நல்ல வழி காட்டும்.

அனைத்தும் சரியாகிவிடும். அமைதியாக இரு.

இறைவனது அருளால் எல்லா நன்மைகளும் வந்து சேர்கின்றன.

இறைவனது உதவியும் ஆதரவும் எனக்கு எப்பொழுதும் இருந்து கொண்டே இருக்கிறது.

நடப்பது நடந்தே தீரும். தடுக்க முடியாதது நிறைவேறியே தீரும்.

ஆழ்ந்த அமைதியில் அசைவற்றிரு.

நான் ஆக்க சக்தி உள்ள ஒரு மனிதன்.

மலர்ந்த முகம். மகிழ்ச்சியான புன்னகை. கவர்ச்சியான காந்தசக்தி.

கண்களையும் காதுகளையும் திறந்து வை. வையை மூடிக் கொள்.

நான் இந்த மனம் அல்ல.

தொடர்புகளை விரிவுபடுத்திக் கொண்டே இருங்கள்.

வாழ்வை மகிழ்ச்சியுடன் கொண்டாடுங்கள்.

எல்லாம் எப்பொழுதும் ஒளிப் பொருந்தியவையாக, மகிழ்ச்சியுடையவையாக, அழகுள்ளவையாக இருக்க வேண்டும்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.