எங்கே என்று தேடும்
உன் விழிகளுக்குள் பார்
அங்கே இருப்பேன்
உன் நினைவுகளாக
உதிர்ந்தன இலைகள்
அழகாய் இருக்கிறது
மரம்
எனது புன்சிரிப்பில்
உடைந்து தூளாகிறது
உன் கூர்வாள்
வெளியேறிக் கொண்டேயிருக்கிறேன்
என் சுவடுகள்
அழிய
வாசிக்கும் புத்தகத்தின்
ஏதோவொரு வாக்கியத்தில்
என்னை காணும்
நான்
வாசிக்கும் புத்தகத்தின்
ஏதோவொரு வாக்கியத்தில்
என்னை காணும்
நான்
பொய்முகம் மாட்டி
அலைவது யாரென்றாலும்
விலகி நிற்பது
சுகம்
உள்ளொன்று வைத்து
உறவென்று வந்தால்
மூடியே கிடக்கும்
என் வீடு
எள்ளி நகையாடும்
எல்லோரிடமிருந்தும்
எட்டி நிற்கும்
நான்
புல் பூண்டுகளை
வெட்டி வீசினேன்
துப்புரவானது
என் மைதானம்
உன் புரிதலுக்கு மேல்
ஒன்றும் புரியாது
விமர்சன கைகளை
வெட்டி ஏறி
நிரூபிக்க முடியாமல்
நிற்கும் கூட்டத்தில்
இன்னும் ஒரு நான்
ஒன்றை கொடுத்து
ஒன்றை பெற்றோம் எனில்
உறவின் வியாபாரியை
ஒதுக்கி வைப்பேன் நான்
என் ஒவ்வொரு மூச்சிலும்
உயிர் வாழ்கிறேன் நான்
மூடிவிட்ட கதவை
திறப்பதற்காக
திரும்பிச் செல்வதில்லை
நான்
ஒரு இலை உதிர்கிறது
ஒரு இலை உயிர்க்கிறது
பொய்யென்று தெரிந்தபின்
கடவுள் என்றாலும்
எதிரிதான் எனக்கு
அடையாளங்களை அழித்தேன்
அந்நியமாய் நிற்கும்
நான்
இன்னொரு முகம் மாட்டி
இருந்தேன் நான்
இப்போது பார்
என் முகம்
உள்ளிறுக்கம் அகலாது
உலா வரும் போதும்
உறங்கும் போதும்
கற்றதெல்லாம் என்னாச்சு
நண்பருக்கு ஏதும்
பதில் சொல்லவில்லை
இறுக்கத்தில் நெருங்கி
சிதறும் மனச்சிலை
உருவத்துக்குள் இல்லை
உயிரும் ஒளியும்
மனச்சிதைவை புதைத்து
மறுபடி எழும் மரக்கன்று
ஊரெங்கும் பறக்கிறது
உயிர் புறா ஒவ்வொரு நாளும்
மேலும் வாழ்கிறது
மயானத்தில் என் வீடு
வெற்றுக்காகிதம்
சாதாரணமாக இருக்க முடிவதில்லை
வார்த்தைகள் பயமுறுத்துகின்றன
பேசாத மற்றும் பேசப்பட்ட
எல்லா வார்த்தைகளையும் சேர்த்து
ஆல்பம் ஒன்று தயாரித்தேன்
உருட்டி மிரட்டின கோடுகளை
இடம் மாற்றி இருத்தினேன்
கருப்புப் புள்ளிகள் கமாக்கள்
ஏகப்பட்ட ஆச்சரியகுறிகள
அடிக்கடி கேள்விக்குறிகள்
இடைக்கோடுகள் நடுவில்
என் தலையும் சிக்கிக் கொண்டிருந்தன
அசிங்கமான வார்த்தைகளையும்
அவலம் மற்றும் அபத்தம் நிறைந்த
உச்சரிக்கக் கூசும் ஒவ்வொன்றையும்
அழிப்பான் கொண்டு அழித்துவிட்டு
எச்சிலாக்கப்படாத எதாவது ஒன்றை
எடுத்துப் பத்திரப்படுத்த எண்ணம்
நீண்ட முயற்சிக்குப் பிறகு
எதுவும் மிச்சமாகவில்லை
வெற்றுக்காகிதம் தவிர.
உலா வரும் போதும்
உறங்கும் போதும்
கற்றதெல்லாம் என்னாச்சு
நண்பருக்கு ஏதும்
பதில் சொல்லவில்லை
இறுக்கத்தில் நெருங்கி
சிதறும் மனச்சிலை
உருவத்துக்குள் இல்லை
உயிரும் ஒளியும்
மனச்சிதைவை புதைத்து
மறுபடி எழும் மரக்கன்று
ஊரெங்கும் பறக்கிறது
உயிர் புறா ஒவ்வொரு நாளும்
மேலும் வாழ்கிறது
மயானத்தில் என் வீடு
வெற்றுக்காகிதம்
சாதாரணமாக இருக்க முடிவதில்லை
வார்த்தைகள் பயமுறுத்துகின்றன
பேசாத மற்றும் பேசப்பட்ட
எல்லா வார்த்தைகளையும் சேர்த்து
ஆல்பம் ஒன்று தயாரித்தேன்
உருட்டி மிரட்டின கோடுகளை
இடம் மாற்றி இருத்தினேன்
கருப்புப் புள்ளிகள் கமாக்கள்
ஏகப்பட்ட ஆச்சரியகுறிகள
அடிக்கடி கேள்விக்குறிகள்
இடைக்கோடுகள் நடுவில்
என் தலையும் சிக்கிக் கொண்டிருந்தன
அசிங்கமான வார்த்தைகளையும்
அவலம் மற்றும் அபத்தம் நிறைந்த
உச்சரிக்கக் கூசும் ஒவ்வொன்றையும்
அழிப்பான் கொண்டு அழித்துவிட்டு
எச்சிலாக்கப்படாத எதாவது ஒன்றை
எடுத்துப் பத்திரப்படுத்த எண்ணம்
நீண்ட முயற்சிக்குப் பிறகு
எதுவும் மிச்சமாகவில்லை
வெற்றுக்காகிதம் தவிர.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.